நகைக்கடை பூட்டை உடைத்து ரூ.12 லட்சம் தங்கம், வெள்ளி கொள்ளை

 

நகைக்கடை பூட்டை உடைத்து ரூ.12 லட்சம் தங்கம், வெள்ளி கொள்ளை

கோவை

கோவை சரவணம்பட்டி அருகே நள்ளிரவில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை சரவணம்பட்டி அடுத்த விசுவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் சத்தி சாலையில் மாருதி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

நகைக்கடை பூட்டை உடைத்து ரூ.12 லட்சம் தங்கம், வெள்ளி கொள்ளை

இதனிடையே நேற்று இரவு முருகன் வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு சென்ற நிலையில், இன்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, போலீசாருடன் அவர் சென்று பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே டிஸ்ப்ளேவில் வைக்கப்பட்டிருந்த குத்து விளக்குகள், சந்தன கிண்ணம், கொலுசு உள்ளிட்ட 5 கிலோ எடையிலான வெள்ளி பொருட்களும், 10 சவரன் தங்க நகைகளும்

நகைக்கடை பூட்டை உடைத்து ரூ.12 லட்சம் தங்கம், வெள்ளி கொள்ளை

கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த சரவணம்பட்டி காவல்நிலைய போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர், கடையின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது