“சாதாரண தொண்டருக்கு கிடைத்த அங்கீகாரம்” – வானதி சீனிவாசன் பெருமிதம்

“சாதாரண தொண்டருக்கு கிடைத்த அங்கீகாரம்” – வானதி சீனிவாசன் பெருமிதம்

கோவை

பாஜகவில் சாதாரண தொண்டரும் உயர் பதவிக்கு வர முடியும் என அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக துணை தலைவராக இருந்த வானதி சீனிவாசன், அண்மையில் பாஜக மகளிரணி தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார். இதனையொட்டி, கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடந்த பாராட்டு விழாவில் வானதி

“சாதாரண தொண்டருக்கு கிடைத்த அங்கீகாரம்” – வானதி சீனிவாசன் பெருமிதம்

சீனிவாசனுக்கு, மாவட்ட பாஜக சார்பில் ஆளுயர மாலையும், மலர் கிரீடமும் அணிவித்து, நினைவு பரிசாக வேல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன்,
ஒரு கட்சி தனது சாதாரண ஊழியர்களை எப்படி அங்கீரிக்க வேண்டும் என்பதை இது நிருபித்துள்ளதாக கூறினார். மேலும், தேசிய அளவில் முதன்முறையாக தமிழகத்தை சேர்ந்தவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர்,

“சாதாரண தொண்டருக்கு கிடைத்த அங்கீகாரம்” – வானதி சீனிவாசன் பெருமிதம்

மக்களுக்காக உழைக்கவும், சேவையை லட்சியமாகவும் கொண்டிருந்தால் எந்த பிரச்சனையும் சமாளித்து உயர முடியம் என்பதற்கு தானே ஒரு உதாரணம் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழக அரசியல் தற்போது மாறி வருவதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய சக்தியை நிரூபிக்கும் விதமாக கொங்கு மண்டலத்தில் அதிகமான எம்.எல்.ஏ-க்களை அனுப்புவதே பாஜகவின் லட்சியம் என்றும் அவர் தெரிவித்தார்.