புகார்தாரர்களின் வீடுகளுக்கே சென்று தீர்வு காணும் கோவை போலீஸ்

 

புகார்தாரர்களின் வீடுகளுக்கே சென்று தீர்வு காணும் கோவை போலீஸ்

கோவை

கோவையில் புகார் அளிப்பவரின் வீடு தேடி சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் செயல் அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளது.புகார் அளிக்க செல்பவரிடம் போலீசார் உரிய அக்கறை செலுத்துவதில்லை என்று மனநிலை மக்களிடம் பரவலாக காணப்படுகிறது. இதனை மாற்றும் நோக்கத்தில் கோவை மாநகர காவல்துறை சார்பில்

புகார்தாரர்களின் வீடுகளுக்கே சென்று தீர்வு காணும் கோவை போலீஸ்

மக்களைத் தேடிச் செல்லும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று புகார்கள் மீது விசாரணை மேற்கொண்டு, தீர்வு கண்டு வருகின்றனர். இந்நிலையில்,கோவை உக்கடம் கெம்பட்டி காலனியை சேர்ந்த 33 வயது தொழிலாளி ஒருவர் மனைவி மற்றும் குழந்தைகளை கவனிக்காமல் கள்ளக்காதலியுடன் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக புகார் வந்தது. இதனையடுத்து

புகார்தாரர்களின் வீடுகளுக்கே சென்று தீர்வு காணும் கோவை போலீஸ்

ஆர்.எஸ் புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரபாவதி நேரில் சென்று கணவன், மனைவி இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

குழந்தை பசியில் இருக்கும் போது கள்ளக்காதல் தேவையா? என ஆய்வாளர் பிரபாவதி அறிவுரை கூறினார். இதை கேட்ட அந்த தொழிலாளி மனம் திருந்தி, மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக உறுதியளித்தார். இதனால், பெண் வீட்டார் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.