கந்துவட்டி, மீட்டர் வட்டி வசூலிப்பர்கள் மீது கடும் நடவடிக்கை… கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை!

 

கந்துவட்டி, மீட்டர் வட்டி வசூலிப்பர்கள் மீது கடும் நடவடிக்கை… கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை!

கோவை

கோவை மாநகரில் கந்துவட்டி மற்றும் மீட்டர் வட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மாநகர காவல் துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது, குடும்ப சூழல் மற்றும் கொரோனா லாக்டவுன் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சமாளிப்பதற்காகவும், வியாபாரத்தை மேற்கொண்டு நடத்துவதற்காகவும், பொதுமக்களும், தொழிலாளர்களும், சிறு – குறு தொழில் நிறுவனங்களை சீரமைக்க தொழிலதிபர்களும் வட்டிக்கு பணம் கேட்டு கந்துவட்டி நிறுவனங்களை அணுகி பணம் பெறுகின்றனர். சில இடங்களில் கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் நேரடியாகவே பொதுமக்கள் / தொழிலாளர்களின் வீடுகளுக்கோ, சிறு – குறு தொழில் முனைவோர் நிறுவனங்களுக்கோ சென்று வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வருகின்றனர். கந்து வட்டிக்காரர்கள் சிலர் மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கின்றனர்.

கந்துவட்டி, மீட்டர் வட்டி வசூலிப்பர்கள் மீது கடும் நடவடிக்கை… கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை!

கந்துவட்டிகும்பலை சார்ந்தோர் அலுவலகம் அமைத்து செயல்பட்டால் காவல்துறையில் சிக்கிகொள்வோம் என்பதை தவிர்க்க அலுவலகம் அமைக்காமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்து பணம் கொடுப்பதும், வசூலிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். கடன் பெற்றவர்கள், வட்டியையும், தவணையையும் அடுத்தடுத்து திருப்பி செலுத்த தவறும்போது, கந்து வட்டிக்காரர்கள் மனிதாபிமானமின்றி கடுமையான வார்த்தைகளால் பேசி, பணத்தை வசூலிக்கிறார்கள்.பல நேரங்களில் , அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்கள். கந்துவட்டிக்காரர்களின் அடாவடித்தனமான நடவடிக்கைகளை குடும்ப மானத்தை கருத்தில் கொண்டு கடனாளிகள் காவல் நிலையத்திற்கு சொல்லாமல் மறைத்து துன்பப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். சிலர் விபரீதமான முடிவுகளை எடுக்கிறார்கள்.

கந்துவட்டி, மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.மேற்படி, நடவடிக்கைளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, கந்துவட்டி, மீட்டர் வட்டி பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முறையாக காவல் நிலையங்களில் புகார் செய்யலாம் அல்லது நேரில் வர இயலாதவர்கள், குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியே சொல்ல தயங்குபவர்கள் , மேற்படி கந்துவட்டிக்கார்களை பற்றிய விபரங்களை அறிந்தவர்கள் அது குறித்த தகவல்களை கோவை மாநகர காவல்துறையின் அலைபேசி எண் 94981 81213 என்ற எண்ணிற்கு தொலைபேசி மூலமாகவும், 81900 00100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். கந்துவட்டி, மீட்டர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் பற்றி தகவல் தரும் பொதுமக்கள் பற்றிய விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.