செவிலியர்கள் காலில் விழுந்து, கண்ணீர் மல்க நன்றி கூறிய டீன்!

 

செவிலியர்கள் காலில் விழுந்து, கண்ணீர் மல்க நன்றி கூறிய டீன்!

கோவை

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியர்களின் காலில், முதல்வர் கண்ணீர் மல்க விழுந்து நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, மருத்துவமனை வாயில் முன்பு வைக்கப்பட்டிருந்த புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உருவப் படத்துக்கு மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தினர்.

செவிலியர்கள் காலில் விழுந்து, கண்ணீர் மல்க நன்றி கூறிய டீன்!

தொடர்ந்து, செவிலியர்கள் மத்தயில் உரையாற்றிய மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், மருத்துவர்கள் இடும் கட்டளைகயும், அறிவுரைகளையும் ஏற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அருகில் சென்று அணுகும் செவிலியர்கள் அனைவரும், போற்றுதலுக்கு உரியவர்கள் என கூறினார்.

செவிலியர்கள் காலில் விழுந்து, கண்ணீர் மல்க நன்றி கூறிய டீன்!

அப்போது உணர்ச்சிவசப்பட்ட முதல்வர், யாரும் எதிர்பார்க்காத விதமாக கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியர்களின் கால்களில் விழுந்து, கண்ணீர் மல்க நீங்கள் தான் தற்போதைய சூழலில் கடவுள் என கூறி நன்றி தெரிவித்தார். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.