கோவை கோனியம்மன் கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

 

கோவை கோனியம்மன் கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

கோவை

கோவையில் புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை மாநகரின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோயிலில், மாசி திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனையொட்டி, இன்று பிற்பகல் 2 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கோனியம்மன், அலங்கரிக்கப்பட்ட தேருக்கு கொண்டுவரப்பாட்டர்.

கோவை கோனியம்மன் கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

தொடர்ந்து, காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், தவத்திரு பேரூர் சாந்தலிங்க அடிகளார் சுவாமிகள் உள்ளிட்டோர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து, அம்மனை வழிபட்டு சென்றனர்.

ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி மற்றும் கருப்ப கவுண்டர் வீதி வழியாக சென்று தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியை கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்து, சுவாமி தரிசனம் செய்தனர்.