கோவையில் கொரோனா தேவி சிலை… காமாட்சிபுரி சக்தி பீடத்தில் பிரதிஷ்டை செய்து, வழிபாடு!

 

கோவையில் கொரோனா தேவி சிலை… காமாட்சிபுரி சக்தி பீடத்தில் பிரதிஷ்டை செய்து, வழிபாடு!

கோவை

கொரோனா பெருந்தொற்றில் இருந்து பொதுமக்களை காக்கும் நோக்கில் கோவையில் கொரோனா தேவி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கோவை காமாட்சிபுரி பகுதியில் உள்ள 51-வது சக்தி பீடத்தில் இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காமாட்சிபுரி ஆதீனம் ஶ்ரீசிவலிங்கேஸ்வரா, கொரோனா வைரஸ், மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்து உள்ளதாகவும், இதை மனதில் கொண்டு, கொரோனா தேவி சிலையை வடித்து உள்ளதாகவும் தெரிவித்தார

கோவையில் கொரோனா தேவி சிலை… காமாட்சிபுரி சக்தி பீடத்தில் பிரதிஷ்டை செய்து, வழிபாடு!

பிளேக் நோய் பரவியபோது, பிளேக் மாரியம்மன் சிலை உருவாக்கி வழிபட்டதாகவும், கடவுள் மட்டுமே ஒரே நம்பிக்கை என்ற நிலையில், இதுபோல சிலைகள் வடிக்கப்பட்டு வழிபாடுகள் நடந்துள்ளதாகவும் கூறிய காமாட்சிபுரி ஆதீனம், அதே போன்று, கொரோனாவின் கோர தாண்டவத்தை நிறுத்த, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம் என தெரிவித்தார்.

மேலும், கொரோனா தேவிக்கு 48 நாட்கள் மகா யாகம் நடத்தி, வழிபடு நடைபெறும் என்றும், இதில் கோவில் பூசாரிகள் மட்டும் கலந்துகொண்டு அம்மனுக்கு பூஜைகள் நடத்துவார்கள் என்றும் தெரிவித்தார். 48 நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று காமாட்சிபுரி ஆதினம் தெரிவித்து உள்ளார்.