கோவையில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை… குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு…

 

கோவையில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை… குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு…

கோவை

கோவையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

கோவை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்றும் பிற்பகலில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில், நள்ளிரவில் திடீரென கனமழை கனமழை பெய்ய துவங்கியது. கோவை மாநகர், ஆழியாறு, பொள்ளாச்சி, அன்னூர், பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட மவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டித் தீர்த்தது.

கோவையில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை… குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு…

அதிகபட்சமாக ஆழியார் பகுதியில் 67.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. கனமழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், கோவை கரும்புக்கடை சேரன் நகர் பகுதியில் பெய்த கனமழையால், அங்குள்ள குளத்தின் கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

நள்ளிரவில் சுவர் இடிந்து விழுந்தததால் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து, கோவை ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.