கோவை மருத்துவமனையில் குவிந்து கிடந்த சடலங்கள்… மருத்துவமனை முதல்வர் விளக்கம்…

 

கோவை மருத்துவமனையில் குவிந்து கிடந்த சடலங்கள்… மருத்துவமனை முதல்வர் விளக்கம்…

கோவை

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த நோயாளிகளின் உடல்கள் தரையில் குவித்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலை பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கி கொண்டுள்ளது. அத்துடன், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில வாரங்களாக இரட்டை இலக்கத்தில் பதிவாகி வருகிறது.

இதனால், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை வைக்க தற்காலிக பிணவறை அமைக்கப்பட்டு, அங்கு உடல்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று தற்காலிக பிணவறையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

கோவை மருத்துவமனையில் குவிந்து கிடந்த சடலங்கள்… மருத்துவமனை முதல்வர் விளக்கம்…

அதனை கண்டு நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் வேதனைக்குள்ளாகினர். மேலும், இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை முதல்வர், மருத்துவமனையில் சடலங்கள் முறையாக கையாளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், சடலங்கள் முறையாக அடுக்கப்பட்டு உள்ளது தொடர்பான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார்.