கோவையில் பொதுமுடக்கம் அமல் – வெறிச்சோடிய முக்கிய சாலைகள்

 

கோவையில் பொதுமுடக்கம் அமல் – வெறிச்சோடிய முக்கிய சாலைகள்

கோவை

கோவை மாவட்டத்தில் பொதுமுடக்கம் அமலுக்கு வந்ததை அடுத்து, நகரின் முக்கிய சாலைகளில் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தினசரி பாதிப்பு 2,500-ஐ கடந்துள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு அறிவிப்பின் படி இன்று காலை முதல் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது.

இதனையொட்டி, நேற்று மளிகை பொருட்கள், காய்கறிகள், இறைச்சி உள்ளிட்டவற்றை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதனால், கோவை டவுன்ஹால், உக்கடம் தியாகி குமரன் மார்க்கெட், உழவர் சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கோவையில் பொதுமுடக்கம் அமல் – வெறிச்சோடிய முக்கிய சாலைகள்

அதேபோல், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திரண்டதால் காந்திபுரம் மற்றும் சிங்கா நல்லூர் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல், டாஸ்மாக் மதுக்கடைகளிலும் மதுவாங்க கூட்டம் அலைமோதியது.

இதனை தொடர்ந்து இன்று காலை முதல் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. இதனால் மாநகரில் உள்ள மளிகை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

கோவையில் பொதுமுடக்கம் அமல் – வெறிச்சோடிய முக்கிய சாலைகள்

இதேபோல், பேருந்து போக்குவரத்து, டாக்சி, ஆட்டோ சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதனால், காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பகுதிகள் வெறிச்சோடின. இதனிடையே, போக்குவரத்து வசதி இல்லாததால் மாநகராட்சி துப்பபுரவு பணியாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். இதனையடுத்து, மாநகராட்சி சார்பில் அவர்களுக்கு பிரத்யேக பேருந்து சேவை ஏற்படுத்தி தரப்பட்டது.