2 மகள்களை கொன்ற தந்தைக்கு, இரட்டை ஆயுள்… கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 

2 மகள்களை கொன்ற தந்தைக்கு, இரட்டை ஆயுள்… கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

கோவை

குடும்ப தகராறில் தனது இரு மகள்களை கழுத்தை நெரித்துக்கொன்ற தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன். மருத்துவ பிரதிநிதி. இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஹேமவர்ஷினி, ஹர்ஷா என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்களுடன் செல்வராணியின் தாயார் பிரேமாவும் வசித்து வந்தார். பத்மநாபன் மது அருந்திவிட்டு, அடிக்கடி மனைவி செல்வராணியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

2 மகள்களை கொன்ற தந்தைக்கு, இரட்டை ஆயுள்… கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி பத்மநாபன் வழக்கம்போல் தகராறில் ஈடுபட்டதால், அவரது செல்வராணியும், அவரது தாயார் பிரேமாவும் கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினர். பின்னர், வீட்டில் தூங்கிகொண்டிருந்த தனது 2 மகள்களையும் அவர் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து படுகொலை செய்தார்.

இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பத்மநாபனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கோவை மாவட்ட மகிளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, குழந்தைகளை கொன்ற பத்மநாபனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.