ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொரோனாவுக்கு பலி… பெற்றோரை இழந்து தவிக்கும் 2 மகன்கள்!

 

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொரோனாவுக்கு பலி… பெற்றோரை இழந்து தவிக்கும் 2 மகன்கள்!

கோவை

கோவையில் கொரோனாவால் பெற்றோர் உள்பட மூவர் உயிரிழந்ததால், அவர்களது 2 மகன்களும் ஆதரவின்றி தவித்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் தன்ராஜ்(45). இவர் அதே பகுதியில் மருந்து கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ஜெயந்தி(40). இவர்களுக்கு விபின்(15), சாமுவேல் (8) என 2 மகன்கள் உள்ளனர். விபின் 10ஆம் வகுப்பும், சாமுவேல் 8ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில், தன்ராஜுக்கு கடந்த 10ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானதால், அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொரோனாவுக்கு பலி… பெற்றோரை இழந்து தவிக்கும் 2 மகன்கள்!

இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அடுத்த 2 நாட்களில் அவரது மனைவி ஜெயந்தியும் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதனிடையே, மருத்துவமனையில் ஜெயந்தியை கவனித்து வந்த, அவரது தாயார் பத்மாவும் (60) தொற்று ஏற்பட்டு, கடந்த வாரம் உயிரிழந்தார்.

தாய், தந்தை, பாட்டி என அடுத்தடுத்து 3 பேரை கொரோனாவுக்கு பறிகொடுத்த சிறுவர்கள் விபின், சாமுவேலை, தற்போது தன்ராஜின் தயார் சாரதா (65) கவனித்து வருகிறார். தனது 2 மகன்களையும் படிக்க வைத்து பொறியாளராக ஆக்க வேண்டும் என தன்ராஜ் கனவு கண்டதாகவும், அதை எப்படி நிறைவேற்றுவது? என்று தனக்கு தெரிய வில்லை என்று சாராதா அம்மாள் கண்ணீர் மல்க கூறினார்.