மாணவர் சேர்க்கையில் இந்தி குறித்து கேட்கப்படவில்லை : கோவை ஆணையர் விளக்கம்!

 

மாணவர் சேர்க்கையில் இந்தி குறித்து கேட்கப்படவில்லை : கோவை ஆணையர் விளக்கம்!

தமிழகத்தில் இருமொழி கொள்கை முறை தான் தொடரும் என முதல்வர் முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். மும்மொழி கொள்கையை எதிர்த்த முதல்வரின் இந்த முடிவுக்கு பலரும் வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து கொரோனாவால் பல மாதங்களாக நடைபெறாமல் இருந்த மாணவர் சேர்க்கை, தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை மாநகராட்சியின் ஒரு பள்ளியில் 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் இந்தி படிக்க விருப்பமா? அல்லது கைதொழில் அதிகமாக கற்க விருப்பமா என கேள்விக் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது. முதல்வர் இருமொழி கொள்கை தான் என அறிவித்திருந்தும் இவ்வாறு கேள்வி கேட்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் சேர்க்கையில் இந்தி குறித்து கேட்கப்படவில்லை : கோவை ஆணையர் விளக்கம்!

இந்த நிலையில் இந்தி படிக்க விருப்பமா? என கேள்விக் கேட்கப்படவில்லை என கோவை ஆணையர் ஷர்வன் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மாணவர் சேர்க்கையின் போது இந்தி தொடர்பாக எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை என்றும் இணையதளத்தில் வெளியான படிவம் போலியானது என்றும் கூறியுள்ளார்.