கொரோனா விதிகளை பின்பற்றாத 2 துணிக்கடைகளுக்கு ரூ.3 லட்சம் அபராதம்

கொரோனா விதிகளை பின்பற்றாத 2 துணிக்கடைகளுக்கு ரூ.3 லட்சம் அபராதம்

கோவை

கோவையில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்காத பிரபல துணிக்கடைகளுக்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முக்கிய கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

கொரோனா விதிகளை பின்பற்றாத 2 துணிக்கடைகளுக்கு ரூ.3 லட்சம் அபராதம்

இந்நிலையில், கூட்டம் நிறைந்த பகுதிகளில் வாகனம் மூலம் தெருக்கூத்து கலைஞர்களை கொண்டு, பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி நேற்று மாலை விழிப்புணர்வு பிரசாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

கொரோனா விதிகளை பின்பற்றாத 2 துணிக்கடைகளுக்கு ரூ.3 லட்சம் அபராதம்

அப்போது, அரசின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக கோவையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாகவும், வணிகர்களிடம் பண்டிகை காலத்தில் பின்பற்றி வேண்டிய கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கபட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 4 மண்டலங்களிலும் அதிகமாக கூட்டமுள்ள கடைகளை, சிறப்பு குழுக்கள் அமைத்து கண்காணித்து வருவதாகவும் கூறிய ஆணையர், வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாத

கொரோனா விதிகளை பின்பற்றாத 2 துணிக்கடைகளுக்கு ரூ.3 லட்சம் அபராதம்

வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார். தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட ஆணையர், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததாக கோவை ஒப்பனக்கார பகுதியில் செயல்படும் இரு பிரபல துணி கடைகளுக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.