kaappan-mobile kaappan-large
  • September
    17
    Tuesday

Main Area

coimbatore
இந்த ரயில்கள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளது!?

கோவையில் இருந்து இன்று மாலை 3.25 மணிக்கு புறப்படும் கோவை டூ மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று மாலை 4.35 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் டூ கோவை பயணிகள் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 5.10 மணிக்கு புறப்படும் வேலூர் டூ அரக்கோணம் பயணிகள் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

sundar Mon, 09/02/2019 - 11:06
தென் மேற்கு ரயில்வே கோயம்புத்தூர் ரயில் சேவை நிறுத்தம் South Western Railway coimbatore மேட்டுப்பாளையம் தமிழகம்

English Title

All these trains have been canceled !?

News Order

0

Ticker

1 கோயம்புத்தூரில் பர்ஸை தவறவிட்ட சிங்கப்பூர் சிட்டிசன்!

சிங்கப்பூரை சேர்ந்த விஜயலட்சுமி சந்திரசேகர் என்பவர் கோயம்புத்தூரில் அவரது பர்ஸ் ஒன்றை தவறவிட்டுள்ளார். 

கோவை மாவட்டம் வடவள்ளியில் 1 C பேருந்து நிலையம் அருகே பர்ஸ் ஒன்று கிடந்ததாகவும், இதில் விஜயலெட்சுமி சந்திரசேகர் என்ற ஐடிகள் இருந்ததாகவும் நடராஜன் வெங்கடேசன் என்பவர் அவரது முக நூலில் பதிவிட்டுள்ளார். மேலும் இது காவல்துறையிடம் இப்படைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். கும்பகோணத்தை சேர்ந்த கே.எம். கார்த்திக் என்பவர் தான் இந்த பர்ஸை கண்டெடுத்து உள்ளார்.  

Purse

கூடுதலாக அதில் தொலைபேசி எண்களையும் இணைத்துள்ளார். பர்ஸ் பற்றிய தகவலுக்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் எனக்கூறி தொலைப்பேசி எண்ணையும் இணைத்துள்ளார். 

aishwarya Wed, 07/31/2019 - 19:46
singapore purse coimbatore Purse தமிழகம்

English Title

Singapore citizen has missed one of her purses in Coimbatore

News Order

0

Ticker

1 செக்ஸ் வெறியில் 2½ வயது சிறுமியை கொலை செய்த உறவினர்

கோவையில் 2½ வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டு, பாழடைந்த கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், 2½சிறுமியை கொலை செய்தது சிறுமியின் மாமா ரகுநாத் என்பது தற்சமயம் தெரியவந்துள்ளது.

பாலியல் நோக்கத்துடன் சிறுமியை தூக்கி சென்ற போது சிறுமி கத்தியதாகவும், அப்போது வாயை மூடிய போது சிறுமி மயங்கியதால் பயத்தில் சிறுமியை கிணற்றில் தூக்கி வீசியதாகவும் ரகுநாத் போலீசாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 38). இவரது மனைவி காஞ்சனா (21). கனகராஜூம், காஞ்சனாவும் கோவை விளாங்குறிச்சி பகுதியில் தோட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இவர்களுக்கு அரும்பதா (2½) என்ற பெண் குழந்தை உள்ளது.

காஞ்சனாவின் தாயார் பேச்சியம்மாள் வீடு விளாங்குறிச்சி பழனியப்பன் தோட்டத்தில் உள்ளது. அங்கு காஞ்சனா தனது மகளுடன் நேற்று முன்தினம் சென்றார். கனகராஜ் அன்னூரில் வசிக்கும் தனது பெற்றோரை பார்க்க சென்று விட்டார். நேற்று இரவு தாயார் வீட்டில் காஞ்சனா தங்கினார். அன்று இரவு காஞ்சனாவின் உறவினர்கள் 2 பேரும் வீட்டில் இருந்துள்ளனர். அனைவரும் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கினார்கள். 

குழந்தையின் தாய், அதிகாலை 2.30 மணிக்கு குழந்தை அரும்பதாவுக்கு பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார். அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து பார்த்த போது அருகில் படுத்திருந்த குழந்தை மாயமானது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காஞ்சனா மற்றும் உறவினர்கள் வீட்டின் அருகே குழந்தையை தேடிப்பார்த்தனர். அப்போது வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் கருவேலங்காட்டு பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் குழந்தை அரும்பதா கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

கிணறு

உடனடியாக சிலர் கயிற்றைக்கட்டி கிணற்றுக்குள் இறங்கி குழந்தையை தூக்கினார்கள். குழந்தை மயங்கி இருப்பதாக நினைத்து அருகில் இருக்கும் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.

இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் துணை கமிஷனர் பாலாஜி சரவணன், உதவி கமிஷனர் சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். குழந்தை அரும்பதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். விசாரணையில், குழந்தையின் மாமாவே சிறுமியை பாலியல் நோக்கில் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

admin Tue, 06/25/2019 - 18:20
sexually harassment , crime, child abuse, coimbatore crime கோவை க்ரைம் க்ரைம்

English Title

Sexual harassment in Kovai | 2½-year-old girl Murdered

News Order

0

Ticker

0 கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

கோவை: கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சந்தோஷ்குமார் கைதான எப்படி என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுமி படுகொலை 
harassment

கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ் என்பவற்றின்  6 வயது மகள் கடந்த 25ஆம் தேதி காணாமல்  போன நிலையில்,  அதிர்ச்சியடைந்த பெற்றோர்  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்  அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை, தேடும் பணியில் தீவிரம் காட்டினர்.  இதையடுத்து சிறுமி கஸ்தூரி நாயக்கன் புதூர் என்ற இடத்தில் சிறுமி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், கத்தி காயங்களுடன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பள்ளத்தில் சடலமாக கிடந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


பாலியல் வன்கொடுமை 
child abuse

இதையடுத்து சிறுமி  கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பது  பிரேத பரிசோதனையில்   தெரியவந்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில், தமிழக காவல்துறை 14 தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர். 

கைதான சந்தோஷ்குமார் 
abuse

இந்நிலையில் சிறுமி கொலை வழக்கில்  தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  சிறுமியின் தாத்தா வீட்டிற்கு சந்தோஷ்குமார் அடிக்கடி சென்றுள்ளார். இதனால் அவர் மீது சந்தேகமடைந்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. 

கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரம் 
abuse

அதில், சம்பவத்தன்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்,அப்போது சிறுமி சத்தம் போட்டதால், பதட்டத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால்  கொலை நடந்த அன்று  எதிர்பாராத விதமாக சந்தோஷ்குமாரின் பாட்டியும் உயிரிழந்துள்ளார். அதனால் தனது டி- ஷர்ட்டை கொண்டு  சிறுமியின் சடலத்தை மறைத்த அவர், அதனை வீட்டின் மூலையில் மறைத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. 

ஆனால் உண்மையில், சிறுமி சடலமாக கிடந்த இடத்தில் இருந்த  டி-ஷர்ட்டை வைத்துத்தான் போலீசார் சந்தோஷ்குமார் மீது சந்தேகமடைந்துள்ளனர். அதனடிப்படையில் அவரை கைது செய்த போதுதான் இந்த வழக்கிலிருந்த மர்ம முடிச்சுகள் அவிழ்ந்துள்ளது. 

கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு
arrest

சந்தோஷ்குமாரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இதில் எத்தனை பேருக்குத் தொடர்பு உள்ளது? அது யார் யார் என்பது தெரிய வரும். இதனிடையே  கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ் குமாரை வரும் 15 ஆம் தேதி வரை காவலில் அடைக்கக் கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதையும் வாசிக்க: கணவன் - மாமியார் கொடுமை: பட்டினியால் உயிரிழந்த பெண்; சாகும் போது 20 கிலோ எடை மட்டுமே இருந்த கொடூரம்!

manikkodimohan Mon, 04/01/2019 - 09:18
T-shirt Police Minor girl’s rape coimbatore கைதான சந்தோஷ்குமார் க்ரைம் குற்றம் உள்ளூர்

English Title

T-shirt lands man in police net for minor girl’s rape, murder in Kovai

News Order

0

Ticker

0 என்னா அலும்பு!... கோவையை தெறிக்கவிட்ட யானை 'சின்னத்தம்பி'யின் இன்னிங்ஸ் முடிந்தது

கோவை: கோவையை ஒட்டிய வனப்பகுதியில் கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்களை திகிலூட்டி வந்த காட்டு யானை தீவிர முயற்சிக்குப் பின் பிடிபட்டது. 

கோவை அருகே தடாகம், நஞ்சுண்டபுரம் போன்ற கிராமங்களுக்குள் சில மாதங்களுக்கு முன்பு 2 காட்டு யானைகள் நுழைந்தன. அங்கு விளைநிலங்களை அழிப்பது, ஊர் மக்களை அச்சுறுத்துவது என அட்டகாசம் செய்து வந்தன. பின்னர் மீண்டும் காட்டுக்குள் சென்றுவிட்டு அவ்வப்போது வந்து அட்டூழியம் செய்தன. 

elephan

அதனால் வனத்துறையினரோ, பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று எண்ணி இந்த யானைகளை பிடிக்க திட்டமிட்டனர். ஆனால் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் இந்த 2 யானைகள் மீது கிராம மக்களுக்கு கொஞ்ச நாளிலேயே பாசம் அதிகமாகிவிட்டது. அதனால் விநாயகா, சின்னதம்பி என்று இந்த யானைகளுக்கு பெயரையும் சூட்டி அழைத்து வந்தார்கள்.

ele

இதில் வினாயகா ரொம்ப சாதுவான டைப். யாருக்கும் எந்தத் தொந்தரவும் தராது. ஆனால் சின்னதம்பியோ எமகாதகன்! பயங்கர சேட்டை... எதற்கும் அடிபணியாமல் எல்லாரையும் தெறிக்க விட்டுவிடும்.

elephantt

இந்நிலையில் கடந்த மாதம், சாதுவான விநாயகாவை முதலில் பிடிக்கலாம் என திட்டமிட்ட வனத்துறையினர் விஜய், மற்றும் கலீம் என்ற 2 கும்கி யானைகளை வரவழைத்தனர். "ஆபரேஷன் விநாயக்" என்று ஒரு பெயரையும் சூட்டி, விநாயகாவை பிடித்துக் கொண்டு போய் முதுமலை காட்டில் விட்டார்கள். அப்போது கிராம மக்கள் விநாயகாவுக்கு மிகுந்த சோகத்துடன் பிரியாவிடை கொடுத்து வழி அனுப்பியனுப்பினர். 

wild

அடுத்ததாக சின்னதம்பியை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டு வந்தார்கள். இதற்காக விநாயகாவை பிடிக்க உதவிய அதே 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு நாள் ஆட்டம் போட்டு வந்த சின்னதம்பி ஒருவழியாக  மயக்க ஊசியும் செலுத்தப்பட்டு பிடிபட்டது.  மயக்கம் தெளிந்ததும் அந்த யானையை முதுமலை காட்டுக்குள் சென்று விட்டுவர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

yaanai

இனி சின்னதம்பிக்கும் கழுத்தில் ரேடியோ காலர் ஐடி கட்டிவிடுவார்கள். இப்படி காலர் ஐடி கட்டிவிட்டால், யானை எந்த பகுதிக்கு தவறி சென்றுவிட்டாலும் எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். மீண்டும் வந்து வாலாட்ட முடியாது. அதனால் சின்னதம்பிக்கும் காலர் ஐடியை கட்டி முதுமலையில் கொண்டு போய் விட வேலைகள் நடந்து வருகிறது.

vikrammuthu Fri, 01/25/2019 - 11:09
wild elephant coimbatore elephant டிஸ்கவர் இந்தியா

English Title

wild elephant chinna thambi caught by foresters

News Order

0 இந்து தலைவர்களை கொல்ல சதி; என்ஐஏ அதிரடி சோதனை

கோவை: இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய சதி செய்தவர்களின் வீடுகளின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சோதனை நடத்தினர்.

இந்து இயக்கங்களின் தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில், சலாவுதீன், ஜாபர் சித்திக், சம்சுதீன், கோவையைச் சேர்ந்த ஆசிக், குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்வர், பைசல் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 7 பேரும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் தேசிய சட்ட விரோத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்து இயக்கங்களின் தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கைதானவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (NIA) இன்று சோதனை நடத்தினர். உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ள பைசல், சந்திரன் வீதியில் உள்ள ஆசிக் மற்றும்  அன்வர் ஆகியோரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனர்.

vikrammuthu Wed, 12/19/2018 - 11:03
nia coimbatore nia தமிழகம்

English Title

NIA raids in coimbatore
2018 TopTamilNews. All rights reserved.