ஜவாஹிருல்லா குறித்து சர்ச்சை கருத்து- ஹெச்.ராஜா மீது கோவை காவல் ஆணையரிடம் புகார்!

 

ஜவாஹிருல்லா குறித்து சர்ச்சை கருத்து- ஹெச்.ராஜா மீது கோவை காவல் ஆணையரிடம் புகார்!

கோவை

ஜவாஹிருல்லா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை கோரி, கோவை காவல் ஆணையரிடம் தமமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு, எம்எல்ஏ-வாக தேர்வாகி உள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் ஜவாஹிருல்லாவுக்கு காவல்துறை அதிகாரி மரணத்துடன் தொடர்பு படுத்தி, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு ஜவாஹிருல்லா சார்ந்துள்ள மனிதநேய மக்கள் கட்சியினரும், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஹெச்.ராஜா மீது இன்று கோவை வடக்கு மாவட்ட தமமுக சார்பில், மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஜவாஹிருல்லா குறித்து சர்ச்சை கருத்து- ஹெச்.ராஜா மீது கோவை காவல் ஆணையரிடம் புகார்!

அந்த மனுவில், ஹெச்.ராஜா செய்தியாளர் சந்திப்பின்போது ஜெயிலர் மரணத்தில் ஜவாஹிருல்லாவை தொடர்பு படுத்தி அவதூறு தகவலை தெரிவித்து உள்ளதாகவும், அது முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல் என்றும் தெரிவித்து உள்ளனர்.

மேலும், அவதூறு பரப்பி தனது வன்மத்தை தீர்த்துக் கொள்வதுடன், தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்ட முயல்வதாக குற்றம்சாட்டியுள்ள அந்த கட்சியினர், இந்த விவகாரத்தல் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.