தேடினாலும் கிடைக்காத ஆரோக்கியம் தரும் தேங்காயை இப்படி சாப்பிடுங்க

 

தேடினாலும் கிடைக்காத ஆரோக்கியம் தரும் தேங்காயை இப்படி சாப்பிடுங்க

தேடினாலும் கிடைக்காத ஆரோக்கியம் தரும்  தேங்காய் –

இந்து கலாச்சாரத்தில் ஆன்மீக செயல்முறைகளில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில் ஒன்று, தேங்காய் (Coconut in tamil). கடவுளர்களுக்கு அர்ப்பணிப்பாகத் தரையில் போட்டு உடைப்பதால், அகங்காரத்தை அழித்துக்கொள்வதாக ஐதீகம். இந்து மதப் புராணங்களில் தென்னை மரம் கற்பகவிருட்சம்எனச் சொல்லப்படுகிறது. கேட்டதைக் கொடுப்பது என்பது இதன் பொருள்.

தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும். மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வளப்படுத்தும்.

தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. குறிப்பாக உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டச்சத்தாக விளங்குகிறது.

தேடினாலும் கிடைக்காத ஆரோக்கியம் தரும் தேங்காயை இப்படி சாப்பிடுங்க

அதிலும் பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ளவேண்டும். எலும்

புகளை பலப்படுத்தி, சரும நோய்களை தீர்த்து, இரத்த சோகையை விரட்டும் தேங்காய் பால். உடலில் மாங்கனீசு குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும். ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது. தேங்காய் பால் வெகு விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும்.

உலகின் பல்வேறு கலாச்சாரங்களாலும் போற்றப்படுவது தேங்காய். இந்தியாவில் புதிதாய் ஒன்றை வாங்கும்போது பூஜிக்கவும்… கோவில்களிலும், திருவிழாக்களிலும், ஹோமங்களிலும் அர்ப்பணிக்கவும் அனைவரும் பயன்படுத்துவது தேங்காயைத்தான். தேங்காயை மட்டுமே உண்டு உயிர் வாழும் மனிதர்களும் உண்டு. உலகில் பல்வேறு மருத்துவ முறைகளிலும் தேங்காய் முக்கியப் பங்காற்றுகிறது.

தேங்காய், மிகச் சிறந்த ரத்த சுத்திகரிப்புப் பண்டம்.

தேங்காயின் மருத்துவத்தன்மை இருதயம், கல்லீரல், சிறுநீரகக் குறைப்பாடுகளை களையக்கூடியது.

தாகம் தணிக்கவும் உடலின் சூட்டைத் தணிப்பதற்கும் இதைவிடச் சிறந்த ஒன்று இல்லை.

சமனற்ற உடல் சூட்டினால் ஏற்படும் விக்கல்களை தேங்காய் நீரைப் பருகுவதால் தணிக்க முடியும்.

முற்றாத தேங்காய்களில் உடலுக்குத் தேவையான புரோட்டீனும் குளுகோஸும் அதிகம்.

வாழைப்பழம், ஆப்பிள் பழங்களில் உள்ளதைவிட அதிக புரோட்டீன் தேங்காயில் உள்ளது.

இளம் தேங்காயின் குளிர்ந்த நீர் செரிமாணத்துக்கு மிகமிக ஏற்றது. குழந்தைகளுக்கும் இதனைப் பருகக் கொடுக்கலாம்.

வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பாதையில் தொற்றுநோய் உள்ளவர்கள் இளநீர் பருகினால் குணப்படும் வாய்ப்பு உள்ளது.

தீவிர வயிற்றுப் புண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 100, 200 மில்லி இளநீரை தினமும் இரண்டு முறை அருந்தலாம்.

பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்கூட அலுவலங்களில் காபி, டீ போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, தற்போது இளநீர் பருகத் தொடங்கியிருப்பது ஆச்சரியப்படத்தக்க உண்மை.

தேங்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?,

வயிறு நிரம்ப வகைவகையாகச் சாப்பிடுவதைவிட, அரை மூடி தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டுப் பாருங்கள், புத்துணர்ச்சியை அனுபவிப்பீர்கள்.

ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, அன்பர்களே… தமிழ்நாட்டில் இட்லி, தோசைக்கு சாம்பாருடன் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியும், ஆப்பத்துக்குத் தேங்காய் பாலையும் தேடாதவர்கள் இருக்கிறார்களா என்ன?