மெல்ல கசிந்த மெசேஜ்! ’அந்த’ கட்சிக்காக உழைக்கும் அமைப்பின் அலுவலர்களுக்கு நேர்ந்த கதி!

 

மெல்ல கசிந்த மெசேஜ்!  ’அந்த’ கட்சிக்காக உழைக்கும்  அமைப்பின் அலுவலர்களுக்கு நேர்ந்த கதி!

வேற யாராவது இதைச் செய்தால் பரவாயில்லை. கொரோனா நடவடிக்கைகள் சரியில்லை என்று தொடர்ந்து விமர்சித்து வரும் அந்த பிரதான கட்சிக்காக
வேலை செய்யும் அமைப்பு இப்படிச் செய்யலாமா? என்று அந்த மெசேஜ் -ஐ பார்த்து பலரும் முணுமுணுக்கிறார்கள்.

’அந்த’ பிரதான கட்சிக்காக வேலை பார்க்கும் அமைப்பின் குழுவில் இருக்கும் ஒருவர், நண்பரிடம் பேசி, தனது மனக் குமுறலை வெளிப்படுத்திய மேசேஜ் சிலரது செல்போன்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதைப்பார்த்துதான் அப்படி முணுமுணுக்கிறார்கள்.

அந்த அமைப்பின் சென்னை அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார்களாம். குழுவில்
ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மற்ற 37 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் மேலும் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானதால்
4 பேரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்களாம். இதனால் அங்கிருந்த மற்ற நபர்கள் கொரோனா அச்சத்தில் அலுவலகத்திற்கு வேலை செய்ய வருவதில்லையாம்.

இந்த நிலையில், இதே அமைப்பின் வேறொரு இடத்தில் வேலை செய்பவர்களை இங்கு வந்து வேலை செய்ய கட்டாயப்படுத்துதான் தலைமை. சென்னை
வந்து வேலை செய்தால்தான், இதுவரை பார்த்த வேலைக்கும் சம்பளம் தரப்படும் என்றும் மிரட்டுகிறதாம் அந்த அமைப்பு. (அப்படீன்னா எத்தனை மாச சம்பள
பாக்கி?)

4 பேருக்கு கொரோனா வந்ததால் அங்கிருந்தவர்களே கொரோனா அச்சத்தினால் வேலை செய்ய வர தயங்கும்போது, எங்களை வரச்சொல்லி  கட்டாயப் படுத்துறாங்களே, இது நியாயமா?

இந்த கொடுமை எல்லாம் சம்பந்தப்பட்ட ’அந்த’கட்சிக்கு தெரி்யாமலா இருக்கும்? அந்த கட்சி்யாவது அவர்களுக்கு அறிவுறுத்தக்கூடாதா? என்று மனம் நொந்து
மெசேஜ் மூலமாக அந்த ஊழியர் பேசிக்கொண்ட விசயம் மெல்ல லீக் ஆகி, ’’நல்லா இருக்குய்யா ஒங்க நியாயம். நீங்க மட்டும் காணொளி காட்சி மூலமாவே
எல்லாத்தையும் முடிச்சிட்டு சேப்டியா இருந்துக்குவீங்க. ஒங்களுக்காக வேலை செய்யுறவங்களுக்கு மட்டும் கொரோனா பயம் வரக்கூடாதா? அதுலயும், சம்பளம்
தராம நீங்க காட்டுறீங்க பாருங்க ஒரு பயம். அது அந்த கொரோனாவ விட மோசமாருக்குய்யா..’’என்று வெடிக்க வைத்திருக்கிறது.

மொழிக்காகவும், மக்களுக்காகவும் தொடர்ந்து களப்பணியில் இருக்கும் அக்கட்சிக்கு வலு சேர்ப்பதற்காக வந்திருக்கும் அந்த அமைப்பு, இதுமாதிரியான
விசயங்களால் பலவீனப்படுத்தாமல் இருந்தால் சரி.