ஒரேயொரு மூவ்… கோகோ கோலாவை ஆட்டம் காண வைத்த ரொனால்டோவின் ஃபர்ஸ்ட் ஆஃப் பீல்ட் கோல்!

 

ஒரேயொரு மூவ்… கோகோ கோலாவை ஆட்டம் காண வைத்த ரொனால்டோவின் ஃபர்ஸ்ட் ஆஃப் பீல்ட் கோல்!

நவீன கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கோல் அடித்துவிட்டு இவர் செய்யும் செலிபிரேஷன் மொமென்ட்கள் ரசிகர்களுக்கு பூஸ்ட் கொடுத்தது போன்று இருக்கும். உலகம் முழுவதும் கால்பந்து பிரபலம் என்றாலும் இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு நிகரானது இல்லை. சொற்ப அளவிலான ரசிகர்களே தமிழ்நாட்டில் உள்ளனர். அதில் பெரும்பாலோனோர் ஒன்று ரொனால்டோவின் பேனாக இருப்பார்கள்.

ஒரேயொரு மூவ்… கோகோ கோலாவை ஆட்டம் காண வைத்த ரொனால்டோவின் ஃபர்ஸ்ட் ஆஃப் பீல்ட் கோல்!

இல்லையென்றால் மெஸ்ஸியின் பேனாக இருப்பார்கள். ஆனால் இனி தமிழ்நாட்டில் கால்பந்துக்கும் ரொனால்டோவுக்கும் அதிக ரசிகர்கள் உருவாகுவார்கள் என்பதை அறுதியிட்டு கூற முடியும். ஆம் ரொனால்டோ செய்த செய்கை அப்படி. ஐரோப்பா கால்பந்து தொடரில் அவரின் தலைமையிலான போர்ச்சுக்கல் அணி ஆடிவருகிறது. போட்டிக்கு முன்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தத் தொடரின் ஸ்பான்ஸர்களில் கோகோ கோலா நிறுவனமும் ஒன்று. அதற்காக செய்தியாளர் சந்திப்பின் போது மேசையில் கோகோ கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன.

ஒரேயொரு மூவ்… கோகோ கோலாவை ஆட்டம் காண வைத்த ரொனால்டோவின் ஃபர்ஸ்ட் ஆஃப் பீல்ட் கோல்!

அப்போது அங்கு வந்து அமர்ந்த ரொனால்டோ, யாரும் எதிர்பார்க்காத விதமாக அந்த பாட்டில்களை ஓரங்கட்டினார். அதற்குப் பிறகு அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை மேலே உயர்த்திக் காட்டி அதைக் குடிக்குமாறு சைகையில் உணர்த்தினார். இந்த வீடியோ சரியாக 20 செகண்ட் தான் இருக்கும். அந்த 20 செகண்ட்டில் ரொனால்டோ போட்ட முதல் ஆஃப் பீல்ட் கோல் இதுதான். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ஹிட்டடித்தது. பல கோடிக்கணக்கான ஷேர்கள், ஹார்ட்டுகள் என பறந்தன.

இந்த ஒற்றை வீடியோ கோகோ கோலாவின் பங்குகள் மதிப்பு சரிவை சந்தித்துள்ளன. கோகோ கோலாவின் பங்குகள் 4 பில்லியன் அளவுக்கு அதாவது 1.6% சரிவைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுக்கிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 30,000 கோடி ரூபாயாம். 242 பில்லியன் டாலாராக இருந்த கோகோ கோலாவின் மொத்த பங்கு மதிப்பு, 238 பில்லியன் டாலருக்கு கீழே சென்றுள்ளது. தற்போது இதனை தமிழர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். கால்பந்து ரசிகர்கள் இல்லாதவர்களும் ரொனால்டோவிற்கு ஹார்டுகளை பறக்க விடுகின்றனர். ரொனால்டோ ஆர்மி உருவானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.