வீடுகளுக்குள் புகுந்த நாகப்பாம்புகள்: யுவராஜினால் பழையபாளையம் மக்கள் நிம்மதி

வீடுகளுக்குள் புகுந்த நாகப்பாம்புகள்: யுவராஜினால் பழையபாளையம் மக்கள் நிம்மதி

ஈரோடு மாநகரப் பகுதியான சம்பத் நகரில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நெருக்கமாக அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியிலுள்ள உள்ள ஒரு வீட்டில் பாம்பொன்று நுழைந்து விட்டதாக பாம்பு பிடிக்கும் வீரர் யுவராஜ் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பாம்பு இருக்கும் வீட்டிற்கு சென்று வீடு முழுவதும் சோதனையிட்டார்.

வீடுகளுக்குள் புகுந்த நாகப்பாம்புகள்: யுவராஜினால் பழையபாளையம் மக்கள் நிம்மதி

அப்போது வீட்டின் கழிப்பறைக்குள் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அந்தப் பாம்பு 5 அடி விஷ தன்மை கொண்ட நாகப்பாம்பு.
இதேபோல் கனிராவுத்தர் குளம், பழையபாளையம் பகுதிகளிலுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் பாம்புகள் நுழைந்து விட்டதாக வந்த தகவலை அடுத்து யுவராஜ் நேரில் சென்று பாம்புகளைத் தேடி அங்கும் அதிக விஷத்தன்மை கொண்ட 6 அடி மற்றும் 7 அடி நீளம் கொண்ட நாகப்பாம்புகளை லாவகமாகப் பிடித்து பத்திரப்படுத்தினார். நேற்று ஒரே நாளில் குடியிருப்பு பகுதியில் 3 நாக பாம்புகள் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடுகளுக்குள் புகுந்த நாகப்பாம்புகள்: யுவராஜினால் பழையபாளையம் மக்கள் நிம்மதி

இதையடுத்து அந்தப் பாம்புகள் வனப்பகுதியில் விடப்பட்டன. மழைக்காலம் என்பதால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பாம்புகள் அதிகம் நுழைய வாய்ப்பிருப்பதால் குடியிருப்புப் பகுதி மக்கள் மிகவும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என பாம்பு பிடி வீரர் யுவராஜ் தெரிவித்தார்.