Home அரசியல் விசிக, மதிமுக கட்சிகள் தனி சின்னம் கோரிக்கை – திமுகவுக்கு பின்னடைவா?

விசிக, மதிமுக கட்சிகள் தனி சின்னம் கோரிக்கை – திமுகவுக்கு பின்னடைவா?

திமுக தலைமையில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, மதிமுக, முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இவை எல்லாம் பாராளுமன்ற தேர்தலில் இருந்தே இதே கூட்டணியில் இருப்பவைதாம். அதனால், தொகுதி பிரிக்கையில் பெரிய அளவில் சிக்கல் இருக்காது என்றே கருதப்பட்டது.

இந்நிலையில் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று மதிமுகவின் வைகோவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவனும் தீர்மானமாகக் கூறியிருக்கின்றனர்.

திமுக கூட்டணியில் விசிகவுக்கு பாராளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரம் மற்றும் விழுப்புரம். இவற்றில் சிதம்பரத்தில் போட்டியிட்ட தொல் திருமாவளவன் மட்டுமே தனிச்சின்னத்தில் போட்டியிட்டார். விழுப்புரத்தில் போட்டியிட்ட விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், திமுகவின் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டார்.

அதேபோல ஈரோட்டில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர், பெரம்பலூரில் போட்டியிட்ட இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர், நாமக்கலில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஆகியோரும் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டார்கள்.

அதாவது உதயசூரியன் சின்னம் அதிக தொகுதிகளில் போட்டியிட்டதே 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை வெல்ல உதவியது என்பது திமுகவினர் வாதம். இதே நிலையை வரும் சட்டமன்ற தேர்தலில்  பின்பற்றவே திமுக நினைக்கிறதாம். ஆனால், திருமாவும் வைகோவும் இப்படி தனிச்சின்ன கோரிக்கை வைத்திருப்பது புதிய சிக்கலாகி இருக்கிறது.

பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக் கட்சியும் தங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்காவிட்டால் தனித்து தேர்தலைச் சந்திக்க இருப்பதாகக் கூறியிருக்கிறது. ஒரு பாராளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதி எனும் அடிப்படையில் அப்படி கோரிக்கை எழுப்பியிருக்கலாம். அதுவும் தனி சின்ன கோரிக்கையை எழுப்பலாம்.

ஏன் இப்படி திடீரென்று தனிச் சின்ன கோரிக்கை எழுப்பப்படுகிறது என்றால், திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதனால், 6 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றுவிட்டால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிடலாம் என்று சில கட்சிகள் திட்டமிடுகின்றன.

கூட்டணி கட்சிகளின் தனி சின்ன கோரிக்கை திமுகவின் வெற்றி வாய்ப்புக்கு பின்னடைவாக அமையுமா என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. ஏனெனில், பாமக vs விசிக மோதிக்கொள்ளும் தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் இருந்தால் வெற்றிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல மதிமுக போட்டியிடும் தொகுதிகள் உதயசூரியனே வெற்றிக்கு உதவும்.

இந்தக் கள யதார்த்தத்தை கூட்டணி கட்சிகள் புரிந்தாலும், தங்கள் கட்சியின் வளர்ச்சி எனும் பார்க்கையில் தனி சின்ன கோரிக்கையே நியாயம் என்று கருதுகின்றன. எப்படியும் கூட்டணி கட்சிகளுக்கு 80 தொகுதிகளையாவது திமுக கொடுக்க வேண்டியிருக்கும். அவற்றில் திமுக சின்னத்தோடு 30 தொகுதிகள் எனில் ஆட்சியை அமைக்க அது உதவும். இல்லையெனில், இழுபறி ஏற்படக்கூடும்.

எனவே, தனிச்சின்ன கோரிக்கை திமுகவின் வெற்றி வாய்ப்பை பின்னுக்கு இழுக்கவே செய்யக்கூடும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கைவிட்ட சசிகலா; தடா போட்ட எடப்பாடி… டிடிவி எடுத்த திடீர் முடிவு!

சசிகலாவை மலை போல் நம்பிக்கொண்டிருந்த டிடிவி தினகரனுக்கு நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. அதனால் தான் இரவோடு இரவாகப் பேட்டி கொடுத்த தினகரன், அமமுக சோர்வடைவது...

அரியலூரில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாகன பேரணி!

அரியலூர் அரியலூரில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. தமிழக...

விருப்ப மனு தாக்கல் செய்த விஜயகாந்த் மகன்: எந்த தொகுதியில் போட்டி?

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் மும்முரமாக களப்பணியாற்றி வரும் நிலையில், தேமுதிக விருப்ப மனு விநியோகத்தை கடந்த மாதம் 25ம் தேதி தொடக்கியது. முதல் நாளே விஜயகாந்த், அவரது...

நேர்காணலில் ஷாக் கொடுத்த எம்ஜிஆர் பேரன்… அந்த 3 தொகுதிகளுக்கு குறி – பச்சைக்கொடி காட்டுவாரா எடப்பாடி?

ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதியிலிருந்து அதிமுகவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுவருகின்றன. நேற்று வரை 8 ஆயிரத்து 174 மனுக்கள் வந்திருந்ததாக தகவல் வெளியாகியது. அனைவரையும் இன்று ஒரே நாளில்...
TopTamilNews