நிலக்கரி விற்று ரூ.4,638 கோடி லாபம் பார்த்த கோல் இந்தியா

 

நிலக்கரி விற்று ரூ.4,638 கோடி லாபம் பார்த்த கோல் இந்தியா

நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனமான கோல் இந்தியா கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் (2020 ஜனவரி-மார்ச்) கோல் இந்தியா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.4,637.95 கோடி ஈட்டியுள்ளது. இது 2019 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 23 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் கோல் இந்தியா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.6,025.38 கோடி ஈட்டியிருந்தது.

நிலக்கரி விற்று ரூ.4,638 கோடி லாபம் பார்த்த கோல் இந்தியா

2020 மார்ச் காலாண்டில் கோல் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.27,568.23 கோடியாக உள்ளது. 2019 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 3.6 சதவீதம் குறைவாகும். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நடைமுறைப்படுத்திய லாக்டவுனால் கடந்த மார்ச் மாதத்தில் ஒரு வாரத்துக்குள் மேல் பணிகள் முடங்கியதால் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி விற்று ரூ.4,638 கோடி லாபம் பார்த்த கோல் இந்தியா

கடந்த மார்ச் வரையிலான 3 மாத காலத்தில் கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 10 சதவீதம் 21.37 கோடி டன்னாக உள்ளது. அதேவேளையில் கடந்த மார்ச் காலாண்டில் கோல் இந்தியா நிறுவனம் 16.38 கோடி டன் நிலக்கரியை விற்பனை செய்துள்ளது.