வர்த்தகத்தை பாதித்த தொற்றுநோய்… கோல் இந்தியா லாபம் ரூ.2,077.5 கோடியாக சரிந்தது

வர்த்தகத்தை பாதித்த தொற்றுநோய்… கோல் இந்தியா லாபம் ரூ.2,077.5 கோடியாக சரிந்தது

கடந்த ஜூன் காலாண்டில் கோல் இந்தியாவின் லாபம் ரூ.2,077.5 கோடியாக குறைந்தது.

மத்திய அரசுக்கு சொந்தமான மற்றும் நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனமான கோல் இந்தியா தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. கோல் இந்தியா நிறுவனம் 2020 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,077.5 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 55.1 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனம் லாபமாக ரூ.4,630 கோடி ஈட்டியிருந்தது.

வர்த்தகத்தை பாதித்த தொற்றுநோய்… கோல் இந்தியா லாபம் ரூ.2,077.5 கோடியாக சரிந்தது
கோல் இந்தியா

2020 ஜூன் காலாண்டில் கோல் இந்தியா நிறுவனத்தின் ஒட்டு மொத்த செயல்பாட்டு வருவாய் ரூ.18,487 கோடியாக குறைந்துள்ளது. இது 2019 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 25.9 சதவீதம் குறைவாகும். கோவிட்-19 பரவல் மற்றும் இதர வருவாய் குறைந்ததே கோல் இந்தியா நிறுவனத்தின் லாபம் குறைந்தற்கு முக்கிய காரணம்.

வர்த்தகத்தை பாதித்த தொற்றுநோய்… கோல் இந்தியா லாபம் ரூ.2,077.5 கோடியாக சரிந்தது
நிலக்கரி

கோல் இந்தியா நிறுவனம் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதத்தில் 12.10 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 11.6 சதவீதம் குறைவாகும். 2020 ஜூன் காலாண்டில் கோல் இந்தியா நிறுவனம் 12.04 கோடி டன் நிலக்கரியை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 21.5 சதவீதம் குறைவாகும்.