நிலக்கரி விற்று ரூ.4,586 கோடி லாபம் பார்த்த கோல் இந்தியா.. பங்கு ஒன்றுக்கு ரூ.3.50 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

நிலக்கரி விற்று ரூ.4,586 கோடி லாபம் பார்த்த கோல் இந்தியா.. பங்கு ஒன்றுக்கு ரூ.3.50 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை

கோல் இந்தியா நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் (2021 ஜனவரி-மார்ச்) ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.4,586.78 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனமான கோல் இந்தியா கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2021 மார்ச் காலாண்டில் (2021 ஜனவரி-மார்ச்) கோல் இந்தியா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.4,586.78 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 1.1 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் கோல் இந்தியா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.4,637.95 கோடி ஈட்டியிருந்தது.

நிலக்கரி விற்று ரூ.4,586 கோடி லாபம் பார்த்த கோல் இந்தியா.. பங்கு ஒன்றுக்கு ரூ.3.50 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை
கோல் இந்தியா

2021 மார்ச் காலாண்டில் கோல் இந்தியா நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் ரூ.24,510.80 கோடியாக குறைந்துள்ளது. 2020 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் வருவாயாக ரூ.25,597.43 கோடி ஈட்டியிருந்தது. 2021 மார்ச் காலாண்டில் கோல் இந்தியா நிறுவனத்தின் செலவினம் ரூ.22,373.04 கோடியிலிருந்து ரூ.21,565.15 கோடியாக குறைந்துள்ளது.

நிலக்கரி விற்று ரூ.4,586 கோடி லாபம் பார்த்த கோல் இந்தியா.. பங்கு ஒன்றுக்கு ரூ.3.50 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை
கோல் இந்தியா

கோல் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 2020-21ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.3.50 இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த போது கோல் இந்தியா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.38 சதவீதம் சரிந்து ரூ.157.10ஆக குறைந்தது.