‘60% பாடத்திட்டத்திற்கே பயிற்சி அளிக்கப்படுகிறது’ – அமைச்சர் செங்கோட்டையன்

 

‘60% பாடத்திட்டத்திற்கே பயிற்சி அளிக்கப்படுகிறது’ – அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களுக்கு 60% பாடத்திட்டத்திற்கே பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தாலும், ஆசிரியர்கள் நேரில் கற்பிப்பது போன்று இல்லை என்றும் குறைந்த நேரத்தில் முழு பாடத்தையும் கற்பிப்பதில் சிரமம் இருப்பதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

‘60% பாடத்திட்டத்திற்கே பயிற்சி அளிக்கப்படுகிறது’ – அமைச்சர் செங்கோட்டையன்

அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 40% பாடத்திட்டங்களை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து தான் தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கு 60% பாடத்திட்டத்திற்கே பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிலிருந்து தான் கேள்விகள் கேட்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், பள்ளிகள் திறப்பது தொடர்பாக குழுவுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.