இலவச கொரோனா தடுப்பூசிக்கான Co-WIN 2.0 செயலி: எவ்வாறு பதிவுசெய்வது? – முழு விவரம் உள்ளே!

 

இலவச கொரோனா தடுப்பூசிக்கான Co-WIN 2.0 செயலி: எவ்வாறு பதிவுசெய்வது? – முழு விவரம் உள்ளே!

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதற்கான முதற்கட்டம் ஜனவரி 16ஆம் தேதி ஆரம்பித்தது. முன்களப் பணியாளர்களும் சுகாதாரத் துறையினரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுவருகிறது. இந்த முதற்கட்ட செலுத்தலை எளிமையாக்கும் நோக்கில் கோ-வின் என்ற செயலி பிரத்யேகமாக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இலவச கொரோனா தடுப்பூசிக்கான Co-WIN 2.0 செயலி: எவ்வாறு பதிவுசெய்வது? – முழு விவரம் உள்ளே!

மருத்துவப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களும் இணையத்தின் மூலம் எளிதாகத் தொடர்புகொள்ள இச்செயலி உருவாக்கப்பட்டது. ஆனால், செயலியில் பல்வேறு கோளாறுகள் இருந்ததால் மருத்துவப் பணியாளர்களுக்குக் குழப்பத்தையே ஏற்படுத்தியது. குறித்த நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்களுக்கு நேரம் கடந்து குறுஞ்செய்தி செல்வது, தவறானவர்களுக்கு தகவல் செல்வது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டன.

இலவச கொரோனா தடுப்பூசிக்கான Co-WIN 2.0 செயலி: எவ்வாறு பதிவுசெய்வது? – முழு விவரம் உள்ளே!

இதனைச் சரிக்கட்டும் வகையில் அப்டேட் செய்து கோ-வின் 2.0 என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. முதல் வெர்சனில் இருந்த புகார்களை இந்த அப்டேட்டில் சரிசெய்திருக்கிறார்கள். அதேபோல இதற்கான அதிகாரப்பூர்வ வலைதளத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இன்னபிற நோய்களைக் கொண்டிருக்கும் 45 வயதைத் தாண்டியவர்களுக்கும் மார்ச் 1ஆம் தேதி தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காகவும் சில கூடுதல் அம்சங்களையும் செயலியில் இணைத்துள்ளார்கள்.

இணைக்கப்பட்டுள்ள கூடுதல் அம்சங்கள் என்னென்ன?

*மார்ட் 1இல் வெளியாகும் கோ-வின் 2.0 செயலியில் ஜிபிஎஸ் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.

*தடுப்பூசி போட்டுக்கொள்ள உங்கள் விவரங்களைப் பதிவுசெய்துகொள்ளலாம். இதுமட்டுமில்லாமல் ஒரே மொபைல் போனில் அல்லது கணக்கில் நான்கு பேருக்குப் பதிவுசெய்யலாம்.

*உங்களால் எந்தத் தடுப்பூசி வேண்டும் என்று தேர்வுசெய்ய முடியாது. இருப்பினும், எந்தத் தேதியில், எந்த மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை தேர்வுசெய்யலாம்.

இலவச கொரோனா தடுப்பூசிக்கான Co-WIN 2.0 செயலி: எவ்வாறு பதிவுசெய்வது? – முழு விவரம் உள்ளே!

கோ-வின் 2.0 வலைதளத்தில் எப்படி பதிவுசெய்து கொள்வது?

*முதலில் cowin.gov.in என்ற வலைதளத்திற்குள் செல்ல வேண்டும்

*அடுத்ததாக உங்களில் 10 டிஜிட் தொலைபேசி எண் அல்லது ஆதார் எண்ணைப் பதிவுசெய்ய வேண்டும்.

*அதன்பின் உங்கள் மொபைலுக்கு ஓடிபி வரும். அதனைப் பதிந்தால் வெரிபிக்கேசன் முடிந்து பதிவாகி விடும்.

*இறுதியாக எந்தத் தேதியில், எந்த மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வது என தேர்ந்தெடுக்கலாம். இந்த நடைமுறைகள் முடிவடைந்த பிறகு ரெபரென்ஸ் ஐடி ஒன்று கிடைக்கும். அதைக் கொண்டு தடுப்பூசி சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.

இலவச கொரோனா தடுப்பூசிக்கான Co-WIN 2.0 செயலி: எவ்வாறு பதிவுசெய்வது? – முழு விவரம் உள்ளே!

பதிவுசெய்ய என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?

*45 வயதைக் கடந்த இணை நோய் கொண்டவர்கள் தங்களின் மருத்துவச் சான்றிதழைப் பதிவேற்ற வேண்டும்.

*60 வயதைக் கடந்த முதியவர்கள் வாக்கு அட்டை, ஆதார் அட்டை, அரசு அங்கீகரித்த அட்டை இதில் ஏதேனும் ஒன்றை எடுத்துவர வேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படுமா?

நாடு முழுவதும் 10 ஆயிரம் அரசு மையங்களும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மையங்களும் செயல்படும். இதில் அரசு மையங்களில் இலவசமாக தடுப்பூசி போடப்படும். தனியார் மையங்களில் அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படும்.