• February
    25
    Tuesday

Main Area

Main



38 ஆண்டுகளாக சொந்த பணத்தில் வருமான வரி செலுத்தாத முதல்வர் மற்றும் அமைச்சர்கள்- முடிவுக்கு கொண்டு வந்த யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தில் வி.பி. சிங் முதல்வராக இருந்தபோது, உத்தர பிரதேச அமைச்சர்கள் சம்பளம், அலவன்ஸ் மற்றும் சில்லரை செலவுகள் சட்டம் 1981 இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, அம்மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் ஏழைகளாகவும் மற்றும் அவர்களது சொற்ப வருமானத்தில் வருமான செலுத்துவது கடினம் என்றும் கருதப்படும். அதனால் அவர்களின் வருமான வரியை மாநில அரசின் கருவூலமே மக்களின் வரி பணத்தை கொண்டு செலுத்திவிடும்.

உ.பி. முன்னாள் முதல்வர்கள்

இந்த சட்டம் இயற்றப்பட்டது முதல் இதுவரை  முலாயம் சிங், அகிலேஷ் யாதவ், மாயாவதி, கல்யாண் சிங், ராஜ்நாத் சிங் மற்றும் என்.டி.திவாரி என மொத்தம் 19 முதல்வர்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்களும் பதவி சுகத்தை அனுபவித்து விட்டனர். உத்தர பிரதேச அமைச்சர்கள் சம்பளம், அலவன்ஸ் மற்றும் சில்லரை செலவுகள் சட்டம் 1981ன் பலனால் இதுவரை அவர்கள் தங்களது சொந்த பணத்தில் வருமான வரியை செலுத்தியது இல்லை. மாநில அரசின் கருவூலமே செலுத்தி வந்த விஷயம் வெளிஉலகுக்கு நேற்றுமுன்தினம்  பரவலாக வெளியே தெரிந்தது.

உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்

இதனையடுத்து சர்ச்சைக்குரிய அந்த பிரிவு அந்த சட்டத்திலிருந்து விரைவில் நீக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக அறிவித்தார். இதன் மூலம் 38 ஆண்டுகளாக முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களின் வருமான வரியை மக்களின் வரி பணத்திலிருந்து செலுத்தும் நடைமுறை முடிவுக்கு வருகிறது.


 

2018 TopTamilNews. All rights reserved.