‘தமிழ்நாடு நாள்’- முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

 

‘தமிழ்நாடு நாள்’- முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

நவ.1 தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து தமிழகத்துடன் 1956, நவ.1ம் தேதி இணைந்தது. மார்ஷல் நேசமணி, மா.பொ.சிவஞானம் உள்ளிட்ட பல தியாகிகளின் உழைப்பாக தமிழகம் தனி மாநிலமாக உருவானது. அதன் படி, இந்திய அரசு நவ.1ல் தான் தமிழ்நாடு என்னும் நம் தாய் நாட்டை சட்டப்படி அங்கீகரித்தது. இந்த நாள் ஆண்டு தோறும், தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

‘தமிழ்நாடு நாள்’- முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

அந்த வகையில்(நவ.1) நாளை தமிழ்நாடு தினம் கொண்டாடப்படவிருப்பதை ஒட்டி, தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்காக பல திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவது அடையாளமாக பெற்றிருக்கின்றது. நம் தமிழ் செல்வத்தை வளர்த்தெடுப்பதில் பாடுபடுவோம். தமிழ் பேசும் நாம் நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்துவதில் தொடர்ந்து பாடுபடுவோம் என வாழ்த்துச் செய்தியில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.