கிருஷ்ண ஜெயந்தி : முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள்!

 

கிருஷ்ண ஜெயந்தி : முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு, பலர் தங்களது உறவினர்களை இழந்துள்ளனர். இந்த நிலை எப்போது மாறி இயல்பு நிலை திரும்பும் என்பதே பலரது எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. இதனிடையே ஒரு சில பண்டிகைகள் வந்து மக்களை ஆறுதல் அடைய செய்கிறது. அந்த வகையில் வரும் புதன் கிழமை கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி : முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள்!

இந்த நிலையில் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகைக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துக்கள் என்றும் அனைவரிடமும் அன்பு செலுத்தி பலன் கருதாது கடைமையை செய்ய வேண்டும் என்றும் பகவத் கீதையின் போதனைகளான பற்றற்று இருத்தல், எளிமையாக அடக்கத்துடன் இருத்தலை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி : முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள்!