ஈரோடு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு பணி குறித்து முதல்வர் ஆய்வு!

 

ஈரோடு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு பணி குறித்து முதல்வர் ஆய்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,549 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களில் சென்றவர்கள் மூலமாக பிற மாவட்டங்களில் பாதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகின்றன.

ஈரோடு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு பணி குறித்து முதல்வர் ஆய்வு!

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணி குறித்து முதல்வர் பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.53.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர், கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பணிகளை அம்மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். அவருடன் அமைச்சர்கள் கருப்பணன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடன் இருக்கின்றனர். ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.97.85 கோடி மதிப்பிலான 15க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.