நெல்லை, தென்காசி மாவட்டங்களின் புதிய வளர்ச்சித்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

 

நெல்லை, தென்காசி மாவட்டங்களின் புதிய வளர்ச்சித்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் சண்முகம் காணொளி வாயிலாக அறிவுறுத்தினார். அதன் படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன் படி நேற்று மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு சென்ற முதல்வர் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதே போல அம்மாவட்டங்களின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களின் புதிய வளர்ச்சித்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

இந்த நிலையில் இன்று நெல்லை மாவட்டத்துக்கு சென்று நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் கொரோனா வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். நெல்லையில் ரூ.196.75 கோடியில் முடிந்த வளர்ச்சி திட்டப்பணிகளை திறந்து வைத்து புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதே போல, தென்காசி மாவட்டத்துக்கான ரூ.78.77 கோடி திட்டங்களையும் திறந்து வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், இரு மாவட்ட ஆட்சியர்களுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.