காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரூ.742.52 கோடியில் நலத்திட்ட உதவிகள்!

 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரூ.742.52 கோடியில் நலத்திட்ட உதவிகள்!

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி ரூ.742 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இதுவரை 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு சென்ற முதல்வர், அந்தந்த மாவட்டங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கி பல திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சென்று முதல்வர் கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரூ.742.52 கோடியில் நலத்திட்ட உதவிகள்!

இந்த நிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரூ.743.52 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கி இருக்கிறார். அதே போல, அம்மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பிலான 43 பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர், 2,112 அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட ரூ.291 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை தொடக்கி வைத்தார். தற்போது மாவட்ட ஆட்சியர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றுள்ள முதல்வர், விவசாய சங்க பிரநிதிகள், சிறு குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.