மகாராஷ்டிராவில் நாளை முதல் 144 தடை உத்தரவு அமல்

 

மகாராஷ்டிராவில் நாளை முதல் 144 தடை உத்தரவு அமல்

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. குறிப்பாக, கொரோனா காரணமாக மிக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் நாளை முதல் 144 தடை உத்தரவு அமல்

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிராவில் நாளை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை இரவு 8 மணி முதல் மாநிலத்தில் 144 தடை உத்தரவு தொடங்கும். இதனையடுத்து அடுத்த 15 நாட்களுக்கு அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும், ஆக்ஸிஜன் தேவைகளை பூர்த்தி செய்ய மாநிலத்திற்கு உதவுமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறோம். அத்தியாவசிய தொழிலாளர்களுக்கு மட்டுமே பொது ரயில், பேருந்து சேவைவழங்கப்படும். உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.