கொரோனா நோயாளிகளிடம் காணொளி வாயிலாக முதல்வர் கலந்துரையாடல்!

 

கொரோனா நோயாளிகளிடம் காணொளி வாயிலாக முதல்வர் கலந்துரையாடல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு மாவட்டமாக முதல்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தென்காசி, கிருஷ்ணகிரி,மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்த முதல்வர் இன்று கடலூர் மாவட்டத்துக்கு சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், அம்மாவட்டத்துக்கு ரூ.57.7 கோடி மதிப்பிலான நிறைவுற்ற மற்றும் புதிய திட்டப்பணிகளை முதல்வர் தொடக்கி வைத்தார்.

கொரோனா நோயாளிகளிடம் காணொளி வாயிலாக முதல்வர் கலந்துரையாடல்!

இதனைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினருடன் கொரோனா தடுப்பு பணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்ட கொரோனா நோயாளிகளுடன் முதல்வர் காணொளி வாயிலாக கலந்துரையாடினார். கடலூர் மாவட்ட தலைமை கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொலைதூர மருத்துவ சேவை மூலம் பேசிய முதல்வர், நோயாளிகளின் உடல்நலம் குறித்து வினவினார். மேலும், விரைவில் அவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வர பிரார்த்திப்பதாகவும் அவர் கூறினார்.