அரும்பணியாற்றிய தியாகச் செம்மல்களுக்கு மணிமண்டபங்கள்; அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் முதல்வர்!

 

அரும்பணியாற்றிய தியாகச் செம்மல்களுக்கு மணிமண்டபங்கள்; அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் முதல்வர்!

நாட்டிற்காக அரும்பணியாற்றிய தியாகச் செம்மல்கள்களான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை உட்பட முத்தரையர், வி.கே.பழனிசாமி கவுண்டர், ஏ.டி.பன்னீர்செல்வம் ஆகிய 4 பேருக்கும் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிவித்தார்.

அரும்பணியாற்றிய தியாகச் செம்மல்களுக்கு மணிமண்டபங்கள்; அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் முதல்வர்!

அப்போது பேசிய அவர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு அவரது பிறந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்று பலர் விடுத்த கோரிக்கையை ஏற்று ரூ.1 கோடி செலவில் அவரது திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே நூலகம் ஒன்றும் அமைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதே போல மற்ற 3 பேருக்கும் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பல்வேறு துறை சார்ந்த சான்றோர்களை சிறப்பித்து மணிமண்டபங்கள் அமைக்கும் விதமாக, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர், திரு.அல்லாள இளைய நாயகர் ஆகியோரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபங்களுக்கு இன்று முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.