முதல்முறையாக…கொரோனா வார்டில் பிபிஇ கிட் அணிந்து களமிறங்கிய முதல்வர்!

 

முதல்முறையாக…கொரோனா வார்டில் பிபிஇ கிட் அணிந்து களமிறங்கிய முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்ய நேற்று மாலை தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.

முதல்முறையாக…கொரோனா வார்டில் பிபிஇ கிட் அணிந்து களமிறங்கிய முதல்வர்!

இன்று காலை திருப்பூரில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் 110 ஆக்சிஜன் படுக்கைகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். 20 கார் ஆம்புலன்ஸ் சேவையையும் தொடக்கி வைத்தார். பின்னர், திருப்பூரிலிருந்து கோவைக்கு சென்ற முதல்வர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கோவையில் 50 கார் ஆம்புலன்ஸ் சேவையையும் தொடக்கி வைத்தார்.

இதையடுத்து, மருத்துவமனைக்குள் இருக்கும் கொரோனா வார்டுக்கு பிபிஇ கிட் அணிந்து சென்ற முதல்வர் ஸ்டாலின், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், நோயாளிகளிடமும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார். கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் இருக்கும் வார்டில் முதலமைச்சர் ஒருவர் நேரில் சென்று கவச உடை அணிந்து ஆய்வு செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.