இலங்கை தமிழர்களுக்கு ரூ.4 ஆயிரம் ; திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

 

இலங்கை தமிழர்களுக்கு ரூ.4 ஆயிரம் ; திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் முதல்வர் என ஸ்டாலின் அறிவித்தார். அதன் படி, கடந்த மாதம் 2,000 ரூபாய் வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்த மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதோடு, 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையும் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இலங்கை தமிழர்களுக்கு ரூ.4 ஆயிரம் ; திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

இந்த நிவாரண நிதி, தமிழகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது முகாம்களுக்கு வெளியே வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதற்காக 5 கோடியே 42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் முக ஸ்டாலின் அரசாணை வெளியிட்டார். இந்த நிலையில், இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் முகாம்களுக்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக, தலா ரூ.4000 வழங்கும் திட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தேன். அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருதாய் மக்களென அரவணைத்துத் தி.மு.க. அரசு காக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.