பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது? – முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

 

பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது? – முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் கடந்த மே மாதம் 7ம் திமுக அரசு ஆட்சி அமைத்தது. அன்றைய தினமே அமைச்சரவை கூட்டம் கூடியது. இதைத் தொடர்ந்து நாளை மீண்டும் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக அமைச்சரவை கூட்டம் கூடி விவாதிப்பது வழக்கம். அதன் அடிப்படையிலேயே நாளைய கூட்டம் நடைபெற உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது? – முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

நாளை காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அனைவரும் கூடி துறைவாரியாக அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள், அதற்கான செலவுகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். அந்த பட்ஜெட்டில் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உள்ளிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை எப்போது நடத்துவது என்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அக்கூட்டத்தில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தின் முடிவில் பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதி அறிவிப்பு வெளியாகுமென வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.