‘தமிழக அரசுக்கு வருவாய் குறைந்துள்ளது’ – ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் முதல்வர் பேட்டி!

 

‘தமிழக அரசுக்கு வருவாய் குறைந்துள்ளது’ – ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் முதல்வர் பேட்டி!

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ரூ.495 கோடி செலவில் கொள்ளிடத்தில் புதிய கதவணை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் திருச்சியில் தொழில் தொடங்க 5 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் திருச்சி சிப்காட்டில் 250 ஏக்கரில் ரூ.200 கோடி மதிப்பில் தொழிற்பூங்கா ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.

‘தமிழக அரசுக்கு வருவாய் குறைந்துள்ளது’ – ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் முதல்வர் பேட்டி!

தொடர்ந்து, தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகளால் தமிழகத்தில் உயிர்ச்சேதம் குறைவாக இருப்பதாகவும் தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி முடிவெடுக்கப்படும் கூறினார். இதனையடுத்து, தமிழக விவசாயிகளுக்குத் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் மருத்துவத்துறை சார்ந்த ஆலோசனைக்கு அனைத்து கட்சி கூட்டம் தேவை ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு மாதத்திற்கு ரூ.12 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று நிதித்துறைச் செயலர் கூறியதாகவும் கூறினார்.