“68 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்தால், 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே பாசிட்டிவ்”.. முதல்வர் பழனிசாமி பேச்சு

 

“68 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்தால், 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே பாசிட்டிவ்”.. முதல்வர் பழனிசாமி பேச்சு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து கொண்டே வருகிறது. ஆரம்பக்கட்டத்தில் நாளொன்றுக்கு 2000 முதல் 3000 வரை அதிகரித்து வந்த பாதிப்பு, இந்த மாத தொடக்கத்தில் இருந்து 6000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும் போது இந்த மாதம் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு குறைவாகவே இருக்கிறது. இந்த கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். மேலும், அம்மாவட்டத்துக்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.

“68 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்தால், 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே பாசிட்டிவ்”.. முதல்வர் பழனிசாமி பேச்சு

இந்த நிலையில் இன்று நாமக்கல்லுக்கு சென்ற முதல்வர் ரூ.243 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக கொரோனா சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தமிழக அரசின் முயற்சியால் பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து, மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தவது சாத்தியம் என்றும் மக்கள் ஒவ்வொரு முறையும் வெளியே செல்லும் போதும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்றும் வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், மக்களின் வாழ்வாதாரத்தை கொரோனா பாதிப்பு பாதிப்பதாக கூறிய அவர், நாளொன்றுக்கு 68 ஆயிரம் பரிசோதனை செய்தால் 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா இருப்பது கண்டறியப்படுவதாகவும் தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வருவதாகவும் கூறினார்.