எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்கும்: மதுரையில் முதல்வர் பழனிசாமி பேட்டி

 

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்கும்: மதுரையில் முதல்வர் பழனிசாமி பேட்டி

ஒவ்வொரு மாவட்டமாக சென்று கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு செய்யும் முதல்வர் பழனிசாமி, இன்று காலை திண்டுக்கல் மாவட்டத்துக்கு சென்றார். அங்கு 42 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர், பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து மதுரைக்கு சென்ற முதல்வர் ரூ.304 கோடி மதிப்பில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளையும், ரூ.21.57 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடக்கி வைத்தார். இதன் பின்னர் மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்கும்: மதுரையில் முதல்வர் பழனிசாமி பேட்டி

ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மதுரையில் 84 கட்டுப்பாட்டு பகுதிகளில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறினார். மேலும், தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் ரூ.25 கோடி செலவில் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.