கால்வாய்கள் புனரமைப்பதற்கான நீண்டகால திட்டம் பரிசீலனையில் உள்ளது: முதல்வர் பழனிசாமி

 

கால்வாய்கள் புனரமைப்பதற்கான நீண்டகால திட்டம் பரிசீலனையில் உள்ளது: முதல்வர் பழனிசாமி

சென்னையைத் தவிரப் பிற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணி குறித்து முதல்வர் பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.53.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர், கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பணிகளை அம்மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். மேலும்,ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.97.85 கோடி மதிப்பிலான 15க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கால்வாய்கள் புனரமைப்பதற்கான நீண்டகால திட்டம் பரிசீலனையில் உள்ளது: முதல்வர் பழனிசாமி

அதன் பின்னர் அங்குப் பேசிய முதல்வர் பழனிசாமி, கால்வாய்களைப் புனரமைப்பதற்கான நீண்டகால திட்டம் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் வேளாண்துறைக்குத் தண்ணீர் முக்கியம் என்பதால் அதைச் சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் குடிமராமத்து திட்டத்தின் மூலம் கிடைக்கும் வண்டல் மண் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறினார். தொடர்ந்து, குண்டாறு வழித்தடத்திலும் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூறினார். மேலும், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை விரைவில் தரம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்தார்.