இனி ம.பி-யைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே மாநில அரசு வேலை! – சிவ்ராஜ்சிங் சௌகான் அறிவிப்பு

இனி ம.பி-யைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே மாநில அரசு வேலை! – சிவ்ராஜ்சிங் சௌகான் அறிவிப்பு

மத்தியப் பிரதேச மாநில மக்களுக்கு மட்டுமே மத்திய பிரதேச அரசில் வேலை வாய்ப்பு கிடைக்கும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.

இனி ம.பி-யைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே மாநில அரசு வேலை! – சிவ்ராஜ்சிங் சௌகான் அறிவிப்பு
தமிழக அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அவர்களை எல்லாம் பிரிவினைவாதம் பேசுகிறார்கள் என்று தேசிய கட்சிகள் ஒதுக்கி வைத்தன. ஆனால், அந்த கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மாநில மக்களுக்கு மட்டுமே உரிமை என்ற சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இனி ம.பி-யைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே மாநில அரசு வேலை! – சிவ்ராஜ்சிங் சௌகான் அறிவிப்பு
இன்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மத்திய பிரதேச இளைஞர்களுக்கு மட்டுமே மாநில அரசு வேலை வழங்குவது என்று எங்கள் அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மத்திய பிரதேசத்தின் வளங்கள் மண்ணின் மைந்தர்களுக்கே” என்றார்.

இனி ம.பி-யைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே மாநில அரசு வேலை! – சிவ்ராஜ்சிங் சௌகான் அறிவிப்பு
கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வேலை செய்து வந்த மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர். போதுமான வேலை வாய்ப்பு, வருவாய் இன்றி அவர்கள் அவதியுற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சுதந்திர தினத்தன்று பேசிய சிவராஜ் சிங், மாநில அரசு வேலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் இன்று அவரது அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.