“திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது”

 

“திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது”

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் இல்லாமல் நடைபெறவிருக்கும் தேர்தல் என்பதால் அரசியல் ரீதியாக, இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இதுவரை தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் களமிறங்கியுள்ளன. மக்களின் வாக்குகளை சேகரிக்க அனைத்து கட்சிகளும் பம்பரமாக சுழன்றுக் கொண்டிருக்கின்றன.

“திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது”

அந்த வகையில், சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. நாடே திரும்பி பார்க்கும் அளவுக்கு, அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்படுகிறது. பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த பெருநகரம் சென்னை தான். சென்னை அமைதிப்பூங்காவாக இருந்தால்தான் தொழில் நடக்கும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, மேயராக இருந்த போதும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும் சென்னைக்கு ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை. போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னைக்கு மெட்ரோ ரயிலை கொண்டு வந்தவர் ஜெயலலிதா தான் என்றும் தெரிவித்தார்.