மாணவர்களின் மன உளைச்சலை போக்கவே தேர்வுகள் ரத்து : முதல்வர் பழனிசாமி பேச்சு

 

மாணவர்களின் மன உளைச்சலை போக்கவே தேர்வுகள் ரத்து : முதல்வர் பழனிசாமி பேச்சு

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பள்ளி கல்லூரிகள் 4 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் நிலவியது. கொரோனா பீதியில் மாணவர்களுக்கு தேர்வு நடத்த இயலாது என்பதால், இறுதியாண்டு தேர்வுகள் தவிர செமெஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என அரசு அறிவித்தது. அதுமட்டுமில்லாமல், அரியர் தேர்வுகளுக்காக பணம் செலுத்தி விட்டு காத்திருக்கும் மாணவர்களின் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். இது மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

மாணவர்களின் மன உளைச்சலை போக்கவே தேர்வுகள் ரத்து : முதல்வர் பழனிசாமி பேச்சு

இந்த நிலையில் கடலூரில் கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என கூறினார். தொடர்ந்து இ பாஸ் குறித்து பேசிய அவர், இபாஸ் முறை இருப்பதால் தான் மக்கள் எங்கே செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க முடிகிறது என தெரிவித்தார். மேலும், அரசு விழாவில் திமுகவை அழைப்பதில்லை என எழுந்த குற்றச்சாட்டு குறித்து பேசிய முதல்வர், அரசு விழாவில் பங்கேற்க அனைத்து கட்சி எம்எல்ஏ, எம்பிக்களுக்கு ஆட்சியர் கடிதம் அனுப்பி விட்டதாகவும் கூறினார்.