‘இன்னும் 30 நாட்களில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை’ – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

 

‘இன்னும் 30 நாட்களில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை’ – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளர், குடும்பன், கடையன், பன்னாடி உள்ளிட்ட 7 வகுப்புகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்து வந்தது. இந்த கோரிக்கைக்கு செவி சாய்த்த முதல்வர் பழனிசாமி, 7 வகுப்பையும் இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் குறிப்பிட மத்திய அரசுக்கு பரிந்துரைப்போம் என அறிவித்திருந்தார்.

‘இன்னும் 30 நாட்களில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை’ – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

ஆய்வுக் குழு பரிந்துரையின் பேரில், அந்த 7 வகுப்புகளும் ஒரே பிரிவாக மாற்றப்பட்டாலும் பட்டியலினத்தில் தொடரும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை எப்போதும் போல வழங்கப்படும் என்றும் முதல்வர் குறிப்பிட்டிருந்தார். பல ஆண்டுகளாக விடுத்து வந்த கோரிக்கை பரிசீலிக்கப்படுவதை எண்ணி, மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் பரமக்குடியில் பேசிய முதல்வர் பழனிசாமி, 7 உட்பிரிவுகளை உள்ளடக்கிய தேவேந்திர குல வேளாளர் அந்தஸ்து பரிந்துரையின் அரசாணை 30 நாட்களில் வெளியாகும் என்றும் பல ஆண்டுகால கோரிக்கையை ஏற்று அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.