கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நமக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்? எம்.பி. கனிமொழி

 

கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நமக்கு  நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்? எம்.பி. கனிமொழி

தமிழகத்தையே உலுக்கியுள்ள சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை – மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘காவல்நிலையத்தில் தாக்கப்பட்டு உயிர் இருந்தால் மட்டுமே அதற்கு ‘லாக்கப் டெத்’ என்று பெயர். ஆனால் சாத்தான்குள விவகாரத்தில் தந்தை மகன் இருவருமே சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னரே இறந்துள்ளனர். இதனால் இது லாக்கப் டெத் என்று சொல்லப்படாது.

கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நமக்கு  நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்? எம்.பி. கனிமொழி

ஆனாலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டப்பட்ட காவலர்களை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார். அதுமட்டுமல்லாது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரித்து உள்ளது. இதை லாக்கப் டெத் என்று திமுக எம்பி கனிமொழி கூறுகிறார். ஆனால் அவர்களின் ஆட்சிக்காலத்தில் இரண்டு பேர் லாக்கப் டெத் சம்பவத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் அவர் இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தேர்தல் வாக்கு வங்கிக்காக தான் செயல்படுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். நீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில், “சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் மூச்சுத்திணறலாலும், உடல்நலக் குறைவாலும் உயிரிழந்தனர் என்று முதல்வர் கூறினார். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் இது லாக்-அப் மரணம் கிடையாது என்று கூறுகிறார்.

இந்த அரசிடமிருந்து, கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நமக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்? முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை காப்பாற்றுவதற்கு முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது” என்று பதிவிட்டுள்ளார்.