இஸ்லாமியர்களின் உரிமையை அதிமுக அரசு விட்டுக் கொடுக்காது : முதல்வர் பேச்சு!

 

இஸ்லாமியர்களின் உரிமையை அதிமுக அரசு விட்டுக் கொடுக்காது : முதல்வர் பேச்சு!

மத்திய அரசின் சட்டங்களைக் கண்டு இஸ்லாமியர்கள் பயப்பட வேண்டாம் என முதல்வர் பழனிசாமி கோவையில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முதல்வர் பழனிசாமி மாவட்டம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு ‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்ற வாசகத்தை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கோவை மாவட்டத்திற்கு சென்றிக்கும் முதல்வர் பழனிசாமி இன்று காலை செல்வபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, குறிச்சி பகுதியில் இஸ்லாமியர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் இஸ்லாமியர்களின் குல்லா அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இஸ்லாமியர்களின் உரிமையை அதிமுக அரசு விட்டுக் கொடுக்காது : முதல்வர் பேச்சு!

அப்போது பேசிய முதல்வர், ஜாதியின் பெயர்களை பிரித்து ஒரு போதும் இணைந்தது கிடையாது. அதற்கு அனுமதியும் கொடுக்க மாட்டோம். மத்திய அரசின் சட்டங்களை கண்டு மக்கள் அச்சப்படுகிறார்கள். நான் உறுதியாக சொல்கிறேன். யாரும் யாரையும் விரட்ட முடியாது. இந்த மண்ணிலே பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. என்னுடைய அரசு மக்களை முழுமையாக பாதுகாக்கும். எந்த சூழலிலும், இஸ்லாமியர்களின் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம். அவர்களுக்கு துணை நிற்போம் என்று கூறினார்.

இஸ்லாமியர்களின் உரிமையை அதிமுக அரசு விட்டுக் கொடுக்காது : முதல்வர் பேச்சு!

மேலும், சிலர் அரசியலுக்காக பேசுவார்கள். நாங்கள் அப்படியல்ல. அதிமுகவின் சொல்லும் செயலும் ஒரே நிலையில் தான் இருக்கும். அதில் எந்த வித மாற்றுக் கருத்தும் கிடையாது என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர், மக்கள் தெளிவாக சிந்திக்க தொடங்கிவிட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர மக்கள் முடிவு செய்துவிட்டனர். திமுக ஆட்சியில் நாட்டு மக்களை கவனிக்காமல் வீட்டு மக்களையே கவனித்தனர். அதிமுகவை நேரடியாக எதிர்க்க முடியாமல் கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வரத் துடிக்கிறார் ஸ்டாலின். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது என அதிரடியாக பேசினார்.