Srivaru Motors Pvt Ltd நிறுவனத்துடன் ரூ.150 கோடியில் ஒப்பந்தம் : முதல்வர் பழனிசாமி ட்வீட்

 

Srivaru Motors Pvt Ltd நிறுவனத்துடன் ரூ.150 கோடியில் ஒப்பந்தம் : முதல்வர் பழனிசாமி ட்வீட்

கடந்த 20 ஆம் தேதி தமிழகத்தில் புதிய தொழில் தொடங்குவதற்காக 8 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கையெழுத்தாகியது. அதன் மூலம் ஆயிரக் கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று காலை தமிழகத்தில் முதலீடு செய்யும் விதமாக 16 நிறுவனங்களுடன் தமிழக முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. அந்த 16 நிறுவனங்களில் ரூ.5.137 கோடி முதலீட்டால் தமிழகத்தில் 8,555 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

Srivaru Motors Pvt Ltd நிறுவனத்துடன் ரூ.150 கோடியில் ஒப்பந்தம் : முதல்வர் பழனிசாமி ட்வீட்

இந்த நிலையில் இன்று காலை ஒப்பந்தம் போடப்பட்ட நிறுவனங்களுள் ஒன்றான Srivaru Motors Pvt Ltd குறித்து முதல்வர் பழனிசாமி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், Srivaru Motors Pvt Ltd நிறுவனம் ரூ.150 கோடி முதலீட்டில் மின்சார பைக்குகள் (E-Bike) உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியது.இதன் மூலமாக சுமார் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். #InvestinTN” என்று குறிப்பிட்டுள்ளார்.