நான் சேலத்திற்கு மட்டும் தான் முதல்வரா? – எதிர்க்கட்சி தலைவர் கேள்விக்கு முதல்வர் பதில்!

 

நான் சேலத்திற்கு மட்டும் தான் முதல்வரா? – எதிர்க்கட்சி தலைவர் கேள்விக்கு முதல்வர் பதில்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்துவது குறித்து கோவையில் இன்று முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இருக்கும் அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் உதவி செய்து வருவதாகவும் கொரோனா தடுப்பு பணியை நாள் தோறும் தீவிரப்படுத்தி தமிழகத்தில் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைத்து வருவதாகவும் கூறினார்.

நான் சேலத்திற்கு மட்டும் தான் முதல்வரா? – எதிர்க்கட்சி தலைவர் கேள்விக்கு முதல்வர் பதில்!

தொடர்ந்து முதல்வரின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கருத்து தெரிவித்து வருவதற்கு முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார். அப்போது, சோதனையான காலத்தில் அரசுக்கு உதவாமல் அவர் தவறான குற்றச்சாட்டை கூறி வருவதாக கூறிய அவர் இதுவரை கொரோனாவை தடுக்க ஸ்டாலின் என்ன ஆலோசனை கூறியிருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார். அதே போல தான் சேலத்திற்கு மட்டும் தான் முதல்வராக இருப்பதாக மு.க ஸ்டாலின் கூறியதற்கு, தான் எல்லா மாவட்டங்களிலும் வளர்ச்சித்திட்ட பணிகளை ஆய்வு செய்து வருகிறேன் என்று கூறினார்.

மேலும், நோயை வைத்து அரசியல் செய்யும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான் என்றும் உண்மைக்கு புறம்பான செய்தியை அவர் தினந்தோறும் ஊடகங்களில் வெளியிட்டு வருவதாகவும் அங்கொன்றும் இங்கொன்றும் விளம்பரத்திற்காக, கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாமல் இருந்ததால் தான் நோய்த் தொற்று பரவியதாகவும் குற்றஞ்சாட்டினார்.